
திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் செட்டிகுளம் அருகே தினேஷ்குமார் (30)-ஜென்சி (25) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு திருமணம் ஆகி 2 வருடங்கள் ஆகும் நிலையில் இரண்டு குழந்தைகள் இல்லை. இவர்களுக்குள் அடிக்கடி குடும்ப தகராறு காரணமாக பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக தினேஷ் ஜென்சியிடம் பேசவில்லை. இந்நிலையில் கடந்த 5-ம் தேதி ஜென்சி தன் அம்மா வீட்டில் இருந்து கணவன் வீட்டிற்கு சென்று எதற்காக என்னிடம் பேசாமல் இருக்கிறீர்கள் என்று கணவனிடம் கேட்டுள்ளார். அப்போது தினேஷ் தன் மனைவியை அடித்து அவதூறான வார்த்தைகளால் பேசியுள்ளார். இது தொடர்பாக ஜென்சி கூடங்குளம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில் அவர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.