புது டெல்லியில் மின்தடை நடைபெற்றபோது, ஒருசில கடைகளில் விளக்குகள் எரிந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது. இதனை கண்டித்து, ஒரு முதியவர், “மின்தடை என்பது ஒரு கட்டுப்பாட்டு நடவடிக்கை, அதை அனைவரும் மதிக்க வேண்டும்” என்று  ஜூஸ் கடைக்காரரிடம் சென்று தடியுடன் விளக்கை அணைக்கச் சொல்வது வீடியோவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ X தளத்தில் @gharkekalesh என்ற பயனரால் பகிரப்பட்டு தற்போது 2.7 லட்சம் பார்வைகளைத் தாண்டியுள்ளது.

வீடியோவில், ‘புது டெல்லி ஜூஸ் கார்னர்’ என்ற கடையை நோக்கி அந்த முதியவர் சென்று, கைபிடியில் வைத்திருந்த ஒரு குச்சியை காட்டி, கடைக்காரரிடம் விளக்கை அணைக்க வலியுறுத்துகிறார். இதனைப்பார்த்த நெட்டிசன்கள், அவரை ““தேசபக்தர்” என அழைத்து, சமூக ஊடகங்களில் வேடிக்கையான கருத்துக்களும், புகழ்ச்சிகளும் பதிவாகின்றன. பலரும், “இந்த நபர் மட்டும் பாகிஸ்தானுக்கும் பஞ்சம்!” என்று நகைச்சுவையுடன் கருத்துகள் தெரிவித்துள்ளனர்.

 

இந்த வீடியோ எப்போது, எங்கு எடுத்தது என்பது இதுவரை உறுதியாகத் தெரியவில்லை. ஆனால், மின்தடையின் போது மக்கள் ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டும் என்பதற்கான சின்னமாக அந்த முதியவர் வர்ணிக்கப்படுகிறார். நெட்டிசன்கள், “இது ஒரு கட்டுப்பாடு என்றால், அதில் அனைவரும் பங்கேற்க வேண்டும்” என்பதைக் குறிப்பிட்டும், சமூக ஒற்றுமை குறித்தும் இந்த வீடியோவில் கருத்து பகிர்ந்து வருகின்றனர். இணையம் முழுவதும் இந்த வீடியோ தற்போது கவனத்தை ஈர்த்துக் கொண்டுள்ளது.