காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் இதற்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை இந்தியா மேற்கொண்டது. இந்த தாக்குதலில் தீவிரவாத முகாம்கள் மட்டுமே குறிவைத்து தகர்க்கப்பட்ட நிலையில் பாகிஸ்தான் நேற்று காஷ்மீர், ராஜஸ்தான், அமிர்தசரஸ், சண்டிகர் என எல்லையோரம் இருக்கும் மாநிலங்களில் அத்துமீறி தாக்குதல் நடத்தியது.

இதன் காரணமாக இந்தியாவின் முழ்படைகளும் களத்தில் இறங்கி அந்த தாக்குதல்களை முறியடித்தது. இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தானில் உள்ள கராச்சி, ராவல்பிண்டி உட்பட பல முக்கிய இடங்களில் இந்தியா தாக்குதல் நடத்தியதில் அவர்களுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் எம்பிகள் அவ்வப்போது பேசும் விவகாரங்கள் வீடியோவாக வைரலாகி சர்ச்சையை யை ஏற்படுத்தி வருகிறது. அதாவது பாகிஸ்தான் எம்பி ஒருவர் இந்தியாவிடம் இருந்து இனி பாகிஸ்தானை அல்லாஹ் தான் காப்பாற்றனும் என்று கண்ணீர் விட்டு அழுத நிலையில் மற்றொருவர் பிரதமர் மோடியின் பெயரை சொல்லக்கூட பாகிஸ்தான் பிரதமருக்கு தகுதி இல்லை என்று நாடாளுமன்றத்தில் கிழித்தெறிந்தார்.

 

இந்நிலையில் பாகிஸ்தான் பாதுகாப்பு துறை அமைச்சர் கவாஜா ஆஸிப் இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது இந்தியாவுக்கு எதிரான போரில் மதராசா மாணவர்களை களத்தில் இறக்குவோம் என்று கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவர் கூறிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில் மாணவர்களை போருக்கு பயன்படுத்துவோம் என்று கூறும் நீங்கள் எல்லாம் ஒரு அமைச்சரா என்று நெட்டிசன்கள் கிழித்தெறிந்து வருகின்றனர்.

மேலும் ஏற்கனவே பாகிஸ்தான் ராணுவத்திலிருந்து ராணுவ தளபதிகள் ராஜினாமா செய்ததாகவும் ஏராளமான ராணுவ வீரர்கள் வெளியேறியதாகவும் செய்திகள் வெளியான நிலையில் அந்த நாட்டின் ராணுவ தளபதி கூட கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் பாகிஸ்தான் ராணுவம் பீதி அடைந்ததால் தான் மாணவர்களை போரில் ஈடுபடுத்துவோம் என அமைச்சர் கூறியதாக கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.