
வி.சி.க எம்.பி-யான ரவிக்குமார் தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் மஞ்சள் நீராட்டு விழா குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, மஞ்சள் நீராட்டு விழாக்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தன்னிடம் வேண்டுகோள் விடுத்ததாக கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து மஞ்சள் நீராட்டு விழா நிகழ்ச்சிகள் பிற்போக்குத்தனமானவை. அதனால் இந்த விழாக்களுக்கு எதிராக நாம் போராட வேண்டும் என நீதிநாயகம் சந்துரு வலியுறுத்தியதாகவும் கூறினார்.
மேலும் மஞ்சள் நீராட்டு விழா நடத்துவது குழந்தைகளுக்கு நல்லதல்ல என்றும், அதிலும் ஊரை கூட்டி நடத்துவது மடத்தனம் என்றும் சந்துருவின் வார்த்தைகளை மேற்கோளிட்டு பதிவு வெளியிட்டுள்ளார்.
இதனையடுத்து அரசியல் பற்றி பேசிய ரவிக்குமார், அரசியல் தளத்தில் வலதுசாரி போக்கை எதிர்த்துக்கொண்டு பண்பாட்டு தளத்தில் அதனை ஊக்குவிப்பதால் அரசியல் தளத்திலும் வலதுசாரி போக்கு வலுப்பெற கூடும் என தன்னுடைய கருத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.