காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்துர் தாக்குதலை நடத்தியது‌. இந்த தாக்குதலின் போது தீவிரவாதிகள் இருந்த 9 இடங்கள் மட்டுமே குறிவைக்கப்பட்ட நிலையில் 3 பயங்கரவாத அமைப்புகள் தகர்க்கப்பட்டது. இந்த சம்பவத்தில் மொத்தம் 100 தீவிரவாதிகள் உயிரிழந்ததாக மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் கூறியிருந்தார்.

இந்த ஆப்ரேஷன் சிந்தூர் தாக்குதல் இன்னும் தொடரும் என்றும் ராஜ்நாத் சிங் கூறியிருந்த நிலையில் பாகிஸ்தானுக்கு இது பெரிய அடியாக விழுந்துள்ளது. இருப்பினும் அவர்கள் இதற்கு பதிலடி கொடுப்போம் என்று கூறி வருகிறார்கள்.

இந்நிலையில் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் எம்பி ஒருவர் கதறி அழும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது இந்தியாவின் தாக்குதலை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாமல் இந்தியா தொடர்ந்து தாக்கினால் பாகிஸ்தானின் எதிர்காலம் என்னவாகும் என்று அவர் கண்ணீர் விட்டு கதறி அழுதார்.

 

இதேபோன்று இன்னும் சில எம்பிகள் கூட அழுததாக கூறப்படுகிறது. அவர் இறுதியாக இந்தியாவிடம் இருந்து பாகிஸ்தானை அல்லாஹ் தான் காப்பாற்றனும் என்கிறார். மேலும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.