கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பாஜக முன்னாள் அமைச்சரும் தற்போதைய எம்எல்ஏவும் ஆன ஜனார்த்தன ரெட்டி என்பவர் சுரங்க முறைகேடு வழக்கில் சிக்கியுள்ளார். இவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் தற்போது 7 வருடங்கள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

இந்த வழக்கு சுமார் 17 வருடங்களாக ஹைதராபாத் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் விசாரணைகள் முடிவடைந்த நிலையில் ஓதலாபுரம் சுரங்க முறைகேடு வழக்கில் அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் தற்போது ஏழு வருடங்கள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும் இதன் காரணமாக அவருடைய எம்எல்ஏ பதவி பறிக்கப்பட்டுள்ளது.