மதுரை மாவட்டம் செக்கானூரணியில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த அஸ்தால் அலி என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள கோழிப் பண்ணையில் வேலை பார்த்து வருகிறார். அஸ்தால் அலிக்கு திருமணம் ஆகி 2 வயதுடைய ஆரிஃபா என்ற மகள் இருந்துள்ளார்.

நேற்று விளையாடிக் கொண்டிருந்த ஆரிஃபா தவறுதலாக எலி பசையை பல் துலக்கும் பேஸ்ட் என நினைத்து சாப்பிட்டதாக தெரிகிறது. சிறிது நேரத்தில் குழந்தையின் உடல் நலம் பாதிக்கப்பட்டதால் உடனே பெற்றோர் குழந்தையை மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார்.

அங்கு சிகிச்சை பலனின்றி ஆரிஃபா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.