ஸ்பெயின் நாட்டிற்கு வந்த சீன சுற்றுலா பயணியின் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது சீன நாட்டை சேர்ந்த சுற்றுலா பயணி ஒருவர் ஸ்பெயின் நாட்டிற்கு வந்திருந்தார். அவர் தனது கேமராவுடன் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது பின்னால் இருந்து வந்த நபர் ஒருவர் அவரிடமிருந்த பையை பறிக்க முயன்றார். இதனை அறிந்து கொண்ட சீன பயணி திருடனுக்கு தக்க தண்டனை கொடுத்தார். தற்காப்பு கலையில் தேர்ச்சி பெற்ற அவர் மிகச் சிறப்பாக தனது திறமையை பயன்படுத்தி அந்த திருடனை தரையில் வீழ்த்தினார்.

பின்னர் அவரது கழுத்தை நெறித்துக் கொண்டு அவர் தப்பிக்க முடியாத படி பிடித்து வைத்திருந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் திருடனை கைது செய்தனர். பின்னர் தைரியம் மற்றும் தன்னம்பிக்கையுடன் திருடனை வீழ்த்திய சீன பயணியை அங்கிருந்தவர்கள் பாராட்டினார்கள். இந்த சம்பவத்தை சுற்றி இருந்த பொதுமக்கள் வீடியோவாக பதிவு செய்த நிலையில் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் இதுபோன்ற தைரியமான நடவடிக்கைகள் திருடர்களுக்கு வரலாற்று பாடமாக இருக்கும் என்று பதிவிட்டுள்ளனர். மேலும் இந்த சம்பவம் வெளிநாட்டு பயணிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாகவும், தற்காப்பு பயிற்சி எடுப்பதன் அவசியத்தை வலியுறுத்துவதாகவும் பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.