
உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள கௌசாம்பி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 16 வயதுடைய சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இந்த தலித் சிறுமி தன் பெற்றோருடன் வசித்து வரும் நிலையில் கடந்த 24ஆம் தேதி தன்னுடைய உறவினர் ஒருவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது சைலேந்திர சரோஜ், நாசர் அகமது மற்றும் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் என 3 பேர் சேர்ந்து கடந்த 27-ம் தேதி சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
இவர்கள் பாலியல் பலாத்காரம் செய்ததோடு மட்டுமின்றி இது பற்றி வெளியே சொல்ல கூடாது என்று கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் படி வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சிறுமியை பலாத்காரம் செய்த மூவரையும் கைது செய்தனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.