
திருவள்ளூர் மாவட்டம் அன்னம்பேடு கிராமத்தில் தனியார் செங்கல் சூளை அமைந்துள்ளது. இந்த செங்கல் சூனையில் கடந்த 2007-ஆம் ஆண்டு வாய் பேச முடியாத காது கேளாத 20 வயது இளம்பெண் தனது அக்கா, அண்ணன், மாமா என் குடும்பத்தினருடன் தங்கி இருந்தார்.
அந்த பெண் தூங்கிக் கொண்டிருந்த போது அதே செங்கல் சூளையில் வேலை பார்த்த திருமலை(19), ஆனந்த்(30) ஆகியோர் பெண்ணை வலுக்கட்டாயமாக தூக்கி சென்று பாலியல் வன்கொடுமை செய்தனர்.
இது குறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் திருமலை, ஆனந்த் ஆகிய கைது செய்தனர். வழக்கு விசாரணை முடிவில் திருமண மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டது. இதனால் நீதிபதி திருமலைக்கு 12 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவு பிறப்பித்தார்.