திருப்பதி மாவட்டம் மங்கலம் பகுதியில் கட்டுமான பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது குடியிருப்பில் கட்டப்பட்டு வந்த கட்டிடத்தில் 5வது மாடி கட்டுமான பணிக்காக சாரம் அமைக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென சரிந்து விழுந்தது. இதில் வேலை செய்து கொண்டிருந்த 3 தொழிலாளர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இந்த தகவல் காவல் நிலையத்திற்கு தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள் உயிர்ழந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தற்போது இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.