தென்காசி மாவட்டம் கீழப்புலியூர் பகுதியில் உள்ள ரேஷன் கடை அருகே, பட்டப்பகலில் நடந்த கொடூரக் கொலை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

32 வயதான குத்தாலிங்கம் என்ற வாலிபர், ரேஷன் பொருட்கள் வாங்க வந்த போது, மரமானவர்கள் அவரை தாக்கிய தலையை துண்டித்து கொடூரமாக கொலை செய்தனர். இந்தச் சம்பவம் மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள பகுதியில் நடந்தது என்பதாலேயே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொலை செய்யப்பட்ட குத்தாலிங்கத்தின் துண்டித்த தலை, சுமார் 6 கிலோமீட்டர் தொலைவில் உள்ள குற்றாலம் அருகேயுள்ள காசிமேஜர்புரம் பகுதியில் ஒரு கோவிலின் அருகே போடப்பட்டுள்ளது. பழிவாங்கும் நோக்கத்தோடு கொலை சம்பவம் அரங்கேறி இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

ஏற்கனவே இதே பகுதியில் நடந்த ஒரு திருமண நிகழ்வில் வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் தொடர்ச்சியாக இந்த தாக்குதல் நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகப்படுகின்றனர் . தற்போது தென்காசி மற்றும் குற்றாலம் போலீசார் இணைந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.