
கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூருவில் சிவாஜி நகர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக். இவர் தனது வீட்டிற்கு எதிர்ப்புறம் உள்ள வீட்டில் வேலை பார்த்து வந்த ஒரு பணிப்பெண்ணிடம் தனது அந்தரங்க உறுப்புகளை காட்டி தகாத முறையில் சைகை செய்துள்ளார். இந்தச் செயலைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பெண் கத்தி கூச்சலிட்டுள்ளார்.
உடனே தனது கணவரையும் அழைத்து கார்த்திக்கின் நடவடிக்கையை குறித்து கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கார்த்திக் அந்தப் பெண்ணின் கணவரை கடுமையாக தாக்கியது மட்டுமல்லாமல், தடுக்க வந்த அக்கம் பக்கத்தினரையும் சிமெண்ட் துண்டுகள், பூந்தொட்டி மற்றும் ஜன்னல் கண்ணாடிகள் கொண்டு கொடூரமான முறையில் தாக்கியுள்ளார்.
மேலும் கார்த்திகை தடுக்க வந்த அவரது தாயையும் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இந்த கொடூர தாக்குதலில் 7 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் அதில் மூவருக்கு பலத்த காயம் ஏற்பட்டதால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணையில் கார்த்திக் இதற்கு முன்னரும் அப்பகுதியில் உள்ள சில பெண்களிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சித்துள்ளார் என்பது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தப்பி ஓடிய கார்த்திக்கை தேடும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.