
தமிழகம் முழுவதும் 4777 டாஸ்மாக் கடைகள் இருக்கும் நிலையில் அரசுக்கு பெரும்பாலான வருவாய் இதன் மூலமே கிடைக்கிறது. தினசரி 1.60 லட்சம் பெட்டிகள் விற்பனை செய்யப்படும் நிலையில், 85 லட்சம் பீர் பாட்டில்கள் ஆகும். அதிலும் கோடை காலம் வந்துவிட்டாலே பீர் விற்பனை என்பது அதிகரிக்கும்.
இதன் காரணமாக குளிர்ச்சியான பீர் பாட்டில்களை இருப்பு வைக்க வேண்டும் என்று டாஸ்மாக் கடைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மது கடைகளில் பீர் பாட்டில்கள் விற்பனை குறைந்துள்ளதாக தற்போது ஒரு தகவல் வெளிவந்துள்ளதால் புதிதாக 4 வகைபீர்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளனராம்.
தமிழகம் முழுவதும் 12 சதவீதம் வரை பீர் பாட்டில்கள் விற்பனை குறைந்துள்ளதால் இந்த புதிய வகை பீர்களை அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளனர். அதன்படி பிளாக்பஸ்டர் என்ற பீர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இது போக பிளாக் போர்டு, உட்பெக்கர் ஆகிய இரண்டு வகை பீர்ர்களை அறிமுகம் செய்யும் முடிவு செய்துள்ளனர். மேலும் இது போக மற்றொரு பீர் பாட்டிலையும் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.