
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற சிஎஸ்கே மற்றும் கொல்கத்தா அணிகளுக்கிடையிலான போட்டியில், சிஎஸ்கே அணி மிக மோசமான பேட்டிங் தோல்வியை சந்தித்தது. டாஸ் வென்ற கொல்கத்தா பந்து வீச்சை தேர்வு செய்த நிலையில், சிஎஸ்கே தொடக்கம் முதலே தடுமாறியது. தொடக்க வீரர்கள் கான்வே மற்றும் ரச்சின் ரவீந்திரா விரைவில் வெளியேறினர். அவர்களைத் தொடர்ந்து வந்த பேட்ஸ்மேன்களும் எதிர்பார்த்த அளவில் ஆடவில்லை. 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழந்து சிஎஸ்கே வெறும் 103 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இந்த மோசமான ஆட்டத்தைப் பார்த்த சிஎஸ்கே ரசிகர்கள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டது. பலர், “இப்பவே ஆட்டம் முடிவுபோல தான் இருக்கிறது” என கருத்து தெரிவித்துவிட்டு மைதானத்தை விட்டு வெளியேறினர். கடந்த சில ஆட்டங்களாகவே சிஎஸ்கே அணியின் நிலைமை சரியில்லை என்பதும், இந்த தோல்விகள் தொடர்ந்து வந்தால் இந்த சீசனில் சிஎஸ்கே கடைசி இடத்தை அடைய நேரிடும் என்ற கவலையும் ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது. ‘தல’ தோனி இருந்தாலும், வெற்றிக்கு வழியில்லை என ரசிகர்கள் ஏமாற்றத்தில் உள்ளனர். மேலும் இந்த போட்டியில் கொல்கத்தா அணி 106 தங்கள் எடுத்து சிஎஸ்கேவை எளிதாக விருத்தியது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.