ஆஸ்திரேலியாவை சேர்ந்த பிரபல நடிகையும், விளம்பரம் மாடலுமான லூசி மார்க்கோவிக் உடல்நல குறைவால் காலமானார். இவருக்கு 27 வயது தான் ஆகிறது. லூசி மார்க்கோவிக்கின் மறைவு பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மூளையில் ஏற்பட்ட கேன்சர் காரணமாக லூசி சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. லூசி ஆஸ்திரேலியாவின் நெக்ஸ்ட் டாப் மாடல் நிகழ்ச்சி மூலம் பிரபலமானார். இவர் armani, Versace உள்ளிட்ட பிரபல நிறுவனங்களின் மாடலாக இருந்து வந்தது குறிப்பிடத்தக்கதாகும்.