மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள டாமோ நகரில் ஒரு தனியார் மிஷனரி மருத்துவமனை அமைந்துள்ளது. இங்கு ஜான் கேம் என்பவர் டாக்டராக இருந்துள்ளார். இவர் பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த ஒரு பிரபலமான இதய நிபுணர் என்று போலி ஆவணங்கள் தயாரித்து டாக்டராக பொதுமக்களை ஏமாற்றி வந்துள்ளார்.

இவர் டாக்டராக பணியேற்று ஒரு மாதமாகும் நிலையில் கிட்டத்தட்ட ஏழு பேருக்கு இதய அறுவை சிகிச்சை செய்தார். ஆனால் 7 பேருமே உயிரிழந்து விட்டனர். இது தொடர்பாக மாவட்ட அதிகாரிகள் நடத்திய விசாரணையில் அவர் ஒரு போலியான டாக்டர் என்பது தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து அவர் தலைமறைவான நிலையில் போலீசார் அவரை வலை வீசி தேடி வந்தனர். தற்போது பிரயாக்ராஜ் பகுதியில் இருந்த அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.