
தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு அரிசி, பருப்பு மற்றும் எண்ணெய் உள்ளிட்ட பல பொருட்கள் மலிவு விலையில் கிடைக்கிறது. அதோடு அரசின் பல நல்ல திட்டங்களும் ரேஷன் கடைகள் மூலமாக பொதுமக்களை சென்றடைகிறது. இந்நிலையில் ரேஷன் கடைகளுக்கு இந்த வாரத்தில் மட்டும் மொத்தம் மூன்று நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி ஏப்ரல் 10-ம் தேதி மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு ரேஷன் கடைகளுக்கு விடுமுறை. இதனையடுத்து ஏப்ரல் 11 மற்றும் ஏப்ரல் 12 ஆகிய தேதிகளும் ரேஷன் கடைகளுக்கு விடுமுறை. மேலும் தொடர்ந்து வியாழன், வெள்ளி மற்றும் சனி எனத் தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை வருவதால் அதற்கு ஏற்ப பொதுமக்கள் திட்டமிட்டு பொருட்களை வாங்கிக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.