அமெரிக்காவில் உள்ள ஃப்ளோரிடோ மாகாணத்தில் 175 வருட பழமையான கல்லறை அமைந்துள்ளது. இந்த வரலாற்று சிறப்பு கல்லறைக்குள் ஒரு ஜோடி அத்துமீறி நுழைந்துள்ளது. அவர்கள் அந்த பழமை வாய்ந்த கல்லறையில் உடலுறவில் ஈடுபட்டனர்‌. அப்போது அங்கு போலீசார் திடீரென வந்த நிலையில் அவர்களிடம் அந்த ஜோடி வசமாக சிக்கியது.

அவர்களை பிடித்த போலீசார் அவர்கள் வந்த காரை சோதனை செய்தபோது அதில் போதைப்பொருட்கள் இருப்பது தெரியவந்தது. அந்த போதை பொருட்களை பறிமுதல் செய்த காவல்துறையினர் அந்த ஜோடிகளை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.