
திருவனந்தபுரம் முதல் பெங்களூரு வரை ஏப்ரல் 1-ஆம் தேதி சென்ற இண்டிகோ விமானத்தில், 5 வயது சிறுமியின் தங்க சங்கிலி திருடப்பட்டதாக விமான ஊழியருக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பெங்களூரு கேம்பேகௌடா விமான நிலைய காவல் நிலையத்தில் எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பிரியங்கா முகர்ஜி என்பவர் தனது இரண்டு குழந்தைகளுடன் பயணம் செய்துள்ளார். அந்த பயணத்தின் போது, திடீரென ஒரு குழந்தை அழத்தொடங்கியதால், குழந்தையை சமாதானப்படுத்த ஒரு பெண் விமான ஊழியரிடம் கொடுத்ததாக பிரியங்கா தெரிவித்துள்ளார். பின்னர், குழந்தையை மீண்டும் பெற்றபோது, அவரது தங்க சங்கிலி காணாமல் போனது என்று கூறியுள்ளார்.
View this post on Instagram
இந்த சம்பவத்தில் விமான ஊழியர் அதிதி அஷ்வினி சர்மா மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. தற்போது காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் தொடர்பாக ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு, மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.