உத்தரப்பிரதேச மாநிலத்தின் ஹத்ராஸ் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தும் சம்பவம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. அதாவது ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள ஜி.டி சாலையில், எடா மாவட்டத்தில் இருந்து தனது மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் சிகந்தரராவுக்கு பயணம் செய்திருந்த நபர் ஒருவரின் வாகனத்தை, பின்னால் வந்த ஒரு பஸ் மோதியது. விபத்துக்குப் பிறகு அந்த நபர் பஸ் ஓட்டுநரை நிறுத்தக் கேட்டபோதும், ஓட்டுநர் பஸ்ஸை நிறுத்த மறுத்ததாக கூறப்படுகிறது.
#हाथरस का एक वीडियो वायरल हो रहा है, जिसमें एक रोडवेज बस चालक ने एक बाइक सवार युवक को बस की खिड़की से लटकाकर करीब 1 किलोमीटर तक दौड़ा दिया। बताया जा रहा है कि किसी बात को लेकर बस चालक और बाइक सवार में कहासुनी हो गई थी, जिसके बाद गुस्साए चालक ने यह खतरनाक कदम उठा लिया। वीडियो में… pic.twitter.com/6hAjnOQr1K
— UttarPradesh.ORG News (@WeUttarPradesh) April 5, 2025
பஸ்ஸை நிறுத்தவேண்டும் என கோரிக்கையுடன் அந்த நபர், பஸ்ஸின் ஜன்னலில் தொங்கிக் கொண்டு பயணித்தார். பஸ் ஓட்டுநர் தொடர்ந்து பஸ்ஸை ஓட்டிய நிலையில், இந்த அதிர்ச்சியான காட்சிகள் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவு வரை பஸ் சென்ற பின்னர், பொதுமக்கள் பஸ்ஸை துரத்தி நிறுத்தினார்கள். பஸ்ஸை நிறுத்தியதும், பாதிக்கப்பட்ட நபர் வாகனத்திற்கு முன் நின்று எதிர்ப்பு தெரிவித்தார். இந்த வீடியோ வைரலாகியதையடுத்து, ஓட்டுநருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன. ஆனால் பின்னர், போலீசாரும், பொதுமக்களும் இடையிலாக நடுநிலை பேச்சுவார்த்தை நடத்தியதால் இரு தரப்பும் சமரசம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
