தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித்குமார். சினிமாவை தாண்டி கார் பந்தயத்தில் கவனம் செலுத்தி வருகிறார்.  துபாயில் நடந்த கார் பந்தய போட்டியில் இவருடைய அணி மூன்றாவது இடம் பிடித்தது. அதேவேளையில் கலைத்துறையிலும் சிறப்பாக பங்களித்து வருகிறார்.  இவருக்கு மத்திய அரசு பத்மபூஷன் விருது அளித்தது. மேலும் 63வது படமான குட் பேட் அக்லி படத்தில் நடித்துள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்துள்ளார். இந்த படம் ஏப்ரல் பத்தாம் தேதி வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் கார் ரேஸை முடித்துக் கொண்டு அஜித் சென்னை திரும்பியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் ரசிகர்களோடு புகைப்படம் எடுத்துக் கொண்டார். அஜித் போன்று அவருடைய மகன் ஆத்விக்கும்  கார் பந்தயத்தில் ஆர்வம் காட்டி வருகிறார். இதனையடுத்து தனது மகனிற்கு அஜித் கார் ரேஸ் ஓட்டுவதற்கு கற்றுக் கொடுத்துள்ளார். இது குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் பலரும் புலிக்கு பிறந்தது பூனையாகுமா? என்று கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.