பிரேசிலை சேர்ந்த 31 வயதான பெட்ரோ ஹென்ரிக் சில்வா டோஸ் சாண்டோஸ் தனது வித்தியாசமான உடல் மாற்றங்களால் தற்போது “வாழும் பேய்” என அழைக்கப்படுகிறார். எட்டு ஆண்டுகளுக்கு முன் பொழுதுபோக்காக துவங்கிய இந்த பயணம், இன்று அவரது வாழ்க்கையின் முக்கியமான பகுதியாக மாறியுள்ளது.

முழு உடலிலும் வண்ணமயமான டாட்டூ, சிகிலிகான் கொம்புகள், இரண்டாக வெட்டப்பட்ட நாக்கு மற்றும் உதடு ஆகியவை அவரது தோற்றத்தை வித்தியாசமாக காட்டுகிறது. இந்த மாற்றங்களில் நாக்கு மற்றும் உதட்டை வெட்டுவது தான் மிகவும் வலியுடனான அனுபவமாக இருந்தது என்றும், ஆனால் இது அவரது ஆர்வம் என்பதால் எல்லாவற்றையும் தாங்கத் தயாராக இருந்ததாகவும் அவர் கூறுகிறார்.

 

View this post on Instagram

 

A post shared by Pedro Kenso (@pedrokenso)

சமூக ஊடகங்களில் அவரது புகைப்படங்கள் வைரலாகி பலரது கவனத்தை ஈர்த்துள்ளன. ஒருபுறம் அவர் பெரும் ஆதரவைப் பெற்றாலும், மறுபுறம் சிலர் அவரை விமர்சிக்கின்றனர். இருப்பினும், அவரது மனைவி வனெஸ்ஸா மற்றும் குழந்தைகள் மைக்கலி, பியேட்ரோ ஆகியோர் வழங்கும் முழுமையான ஆதரவே அவருக்கு மிகுந்த உற்சாகத்தை அளிக்கிறது.

இதுவரை ரூ.2.21 லட்சம் செலவழித்துள்ள பெட்ரோ, இந்த பயணம் முடிவடையவில்லை என்றும், மேலும் வித்தியாசமான மாற்றங்களை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளாரெனவும் கூறுகிறார்.