திமுக எம்பி ஆ. ராசா கடவுளை வணங்க வேண்டாம் என்று கூறவில்லை. கடவுள் மீது எங்களுக்கு எந்த கோபமும் கிடையாது. நெற்றியில் பொட்டு வைப்பது மற்றும் கைகளில் கயிறு கட்டுவது சங்கிகளின் அடையாளம்.

கரைவேட்டி கட்டி விட்டால் நெற்றி பொட்டை அவிழ்த்து விட்டு வெளியேற வேண்டும். நீங்களும் பொட்டு வைத்து கயிறு கட்டுகிறீர்கள் நீங்களும் சங்கிகள் தான். இப்படி செய்தால் யார் சங்கி யார் திமுக காரன் என்று வித்தியாசம் தெரியாமல் போய்விடும் என்று கூறினார்.

இதற்கு தற்போது பாஜக கட்சியின் மூத்த தலைவர் எச். ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் கூறியதாவது, திமுகவில் இருக்கும் மாற்று மதத்தினரை அதாவது முஸ்லிம்களை குல்லா அணிய வேண்டாம் என்றும், கிறிஸ்தவர்களை சிலுவை அணிய வேண்டாம் என்றும் ஆ. ராசா கூறுவாரா.? இதை சொல்வதற்கு ராசா போன்ற இந்து விரோத சக்திகளுக்கு தைரியம் வருமா.? ஆனால் இந்துக்களை பற்றி மட்டும் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம்.

இதற்குத்தான் ஆரம்பத்தில் இருந்தே திமுகவை இந்து விரோத சக்தி என்று நான் கூறுகிறேன். அல்லேலூயா என்று சொல்கிற ஒருவரை அறநிலையத்துறை அமைச்சராக வைத்துள்ளீர்கள். அவரை அறநிலையத்துறையை அழிப்பதற்காக தானே வைத்துள்ளீர்கள். திமுக ஒரு நச்சு பாம்பு மற்றும் இந்துக்களை அழிப்பதற்கான சக்தி என்பதை புரிந்து கொள்ள வேண்டும். மேலும் இவர்களுக்கு 2026 ஆம் ஆண்டு தேர்தலில் மக்கள் பாடம் புகட்ட வேண்டும் என்று கூறினார்.