பாஜகவில் 75 வயதை கடந்தவர்களுக்கு பதவியில் நீடிக்க அனுமதி இல்லை என்ற நடைமுறையால், இப்போது 75-வது வயதை நெருங்கும் பிரதமர் நரேந்திர மோடியின் எதிர்காலம் குறித்து அரசியல் விவாதம் உருவாகி வருகிறது. இந்த சூழலில், சிவசேனா (உத்தவ் அணியின்) மூத்த தலைவர் சஞ்சய் ராவத், பிரதமர் மோடி சமீபத்தில் நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்துக்குச் சென்றது, அவரின் பதவியிலிருந்து விலகுவதை அறிவிக்கத்தான் என கூறியுள்ளார்.

இதற்குப் பதிலளிக்கும் வகையில், மஹாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ், “மோடி 2029-ஆம் ஆண்டிலும் பிரதமராகவே இருப்பார்” என உறுதியாக தெரிவித்துள்ளார். மோடியின் தலைமையில் நாடு முன்னேறி வருகிறது, அவருக்குப் பதிலாக யாரும் தேவையில்லை எனவும், எதிர்க்கட்சிகள் இப்போது உருவாக்கும் வதந்திகள் அடிப்படை இல்லாதவை என்றும் பாட்னாவிஸ்  கூறியுள்ளார்.