தமிழ்நாட்டில் அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு தேர்தலை எதிர் கொள்ள தற்போதைய அரசியல் கட்சிகள் தயாராகி வருகிறது. அந்த வகையில் அதிமுக மீண்டும் பாஜகவுடன் கூட்டணி அமைக்க இருப்பதாக கூறப்படும் நிலையில் சமீபத்தில் எடப்பாடி பழனிச்சாமி டெல்லி சென்று அமித்ஷாவை நேரில் சந்தித்தார். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் அடுத்ததாக செங்கோட்டையன் டெல்லிக்கு சென்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்தார்.

அதாவது ஒருங்கிணைந்த அதிமுகவை உருவாக்க வேண்டும் என்று பாஜக முயற்சி செய்து வரும் நிலையில் எடப்பாடி பழனிச்சாமி ஓபிஎஸ் மற்றும் சசிகலா உள்ளிட்டோரை மீண்டும் கட்சியில் சேர்க்க மறுப்பு தெரிவித்து வருகிறார்.  இதனால் செங்கோட்டையன் தலைமையில் ஒருங்கிணைந்த அதிமுகவை உருவாக்க பாஜக முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் செங்கோட்டையனுக்கு ஒய்பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அதிமுக முன்னால் அமைச்சர் வைகைச் செல்வன் நேற்று செய்தியாளர்களை சந்தித்தபோது அவரிடம் இது தொடர்பாக நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறியதாவது, செங்கோட்டையனுக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட இருப்பதாக நானும் தகவலை கேள்விப்பட்டேன். மேலும் எடப்பாடி பழனிச்சாமிக்கு Z+பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று அவர் கூறினார். முன்னதாக செங்கோட்டையன் கட்சிக்குள் நடக்கும் பிரச்சினைகளை இப்படி பேசுவது அநாகரிகமானது என்று வைகைச் செல்வன் விமர்சித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.