
குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர் அபிஷா வர்மா. இவர் திருமுடிவாக்கம் பகுதியில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் தோழிகளுடன் தங்கி தனியார் நிறுவனத்தில் விமான பணிப்பெண்ணாக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் முதல் அபிஷாவின் செல்போனியன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டு இருந்தது.
இதனால் அபிஷாவின் தோழிகள் துபாயில் இருக்கும் அவரது தாயை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு விஷயத்தை கூறியுள்ளனர். அப்போது அபிஷாவின் தாய் திருமுடிவாக்கம் பகுதியில் இருக்கும் வேறொரு அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீட்டுக்கு அபிஷா வாடகைக்கு சென்றுள்ளதாகவும், அங்கு சென்று பார்க்குமாறு அவரது தாய் கூறியுள்ளார்.
இதனால் அபிஷாவின் தோழிகள் அந்த அடுக்குமாடி குடியிருப்பு சென்று பார்த்தனர். அங்கு அபிஷா தூக்கில் சடலமாக தொங்குவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அபிஷாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.