
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு இருமுறை அகவிலைப்படி உயர்த்தப்படுகிறது. மத்திய அரசு அகவிலை படியை உயர்த்தும்போது மாநில அரசுகளும் அகவிலை படியை உயர்த்துகிறது. சமீபத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு 3 சதவீதம் வரை அகவிலைப்படி உயர்த்தப்பட்டது.
இதனால் 53% வரை அகவிலைப்படி வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மார்ச் மாதம் அகவிலைப்படி உயர்வு தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று தகவல் வெளியான நிலையில் தற்போது மத்திய அமைச்சரவை அதற்கு ஒப்புதல் வழங்கி உள்ளது. அதன்படி மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலை படியை 2 சதவீதம் வரை உயர்த்துவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
இதனால் அகவிலைப்படியானது 53 சதவீதத்தில் இருந்து 55 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதனால் ஊழியர்களுக்கு சம்பளம் அதிகரிக்கும். மேலும் இந்த அளவிலைப்படி உயர்வு ஓய்வூதியதாரர்களுக்கும் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.