
மதுரை உசிலம்பட்டி காவல் ஆய்வாளரின் ஓட்டுனராக முதல் நிலை காவல் ஆய்வாளரான முத்துக்குமார் (40) என்பவர் இருந்துள்ளார். இவர் நேற்று டாஸ்மாக் கடைக்கு மது அருந்துவதற்காக சென்றுள்ளார். அவர் நேற்று வழக்கம்போல் தன்னுடைய பணியை முடித்துவிட்டு முத்தையன்பட்டி பகுதியில் உள்ள மதுபான கடைக்கு சென்றார். அங்கு முத்துக்குமார் மது அருந்து கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத சில மர்ம நபர்களுடன் திடீரென தகறாறு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கிருந்து முத்துக்குமார் வெளியேறிய நிலையில் ராஜாராம் என்பவருடைய தோட்டத்திற்கு சென்றார்.
அப்போது அங்கு சில அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் வந்து முத்துக்குமாரை பின்னாலிருந்து கல்லால் அடித்தனர். இதில் முத்துக்குமாருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த தாக்குதலில் ராஜாராமுக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.