
ஐரோப்பிய யூனியன், ரஷ்யா மூன்றாம் உலகப்போரைத் தொடங்கிவிட்டதாகவும், இதன் விளைவாக 27 ஐரோப்பிய நாடுகளில் வாழும் 45 கோடி மக்கள் அடுத்த 72 மணி நேரத்திற்கு தேவையான உணவு, தண்ணீர் மற்றும் அவசியமான பொருட்களை கையிலே வைத்திருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. உக்ரைனின் சுமி நகரில் நடந்த ரஷ்ய ஏவுகணை தாக்குதலில் பலர் உயிரிழந்தனர்.
நேட்டோவின் பொதுச் செயலாளர் மார்க் ருட்டே, “2030 ஆம் ஆண்டுக்குள் ரஷ்யா ஐரோப்பாவில் மிகப்பெரிய தாக்குதலை நடத்தும் திறனை பெற்று விடும்” என கூறியிருக்கிறார். அதேசமயம், ‘ரஷ்யா ஒரு போர் பொருளாதார அமைப்பாக மாறிக்கொண்டிருப்பது, அதன் படைத்திறனை பெரிதும் உயர்த்தும்’ எனவும் அவர் கூறியுள்ளார். இந்த சூழலில் ஐரோப்பிய யூனியன், எதிர்கால அபாயங்களை எதிர்கொள்வதற்கான தயாரிப்பை வலியுறுத்தியுள்ளது.
மேலும், ரஷ்யா தனது ‘Ufa’ நீர்மூழ்கி கப்பலில் இருந்து வெற்றிகரமாக ஏவுகணை பயிற்சியை நடத்தியது, ஐரோப்பிய யூனியனின் அச்சத்தை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த ‘கலிபர்’ ஏவுகணை சுமார் 2,500 கி.மீ தூரத்தில் உள்ள இலக்குகளை தாக்கும் திறனுடையது. உக்ரைன் முதல் ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, போலந்து போன்ற 26 ஐரோப்பிய நகரங்கள் இந்த ஏவுகணை இலக்காக இருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவல்களால் மக்கள் மத்தியில் பெரும் கவலையும் பதற்றமும் ஏற்பட்டுள்ளது.