ஹைதராபாத்தில் சாலையில் நடந்த ஒரு விபத்தின் போது பதிவான வீடியோவில் பெண் ஒருவர் நூலிலையில் உயிர் தப்பிய சம்பவம் இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஹைதராபாத்தில் உப்பல்  பகுதியில் மாலை நேரத்தில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படும். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அப்பகுதியில் வாகனங்கள் தொடர்ந்து சென்று கொண்டிருந்த நிலையில் ஒரு பெண் சாலையின் ஓரமாக நடந்து வந்து கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாரத விதமாக அவரின் எதிரே வந்த மினி வேன் ஒன்று கட்டுப்பாட்டை இழந்த நிலையில் அவரை மோதும் படியாக அவரின் முன்னாள் வந்தது. இதனை பார்த்த அந்த பெண் தன்னை காப்பாற்றிக் கொள்ள சாலையின் பக்கவாட்டில் ஓடினார். இதனால் அவர் அந்த விபத்தில் இருந்து தப்பினார். அதோடு அந்த மினி வேன் அங்கிருந்த கம்பத்தின் மீது மோதி நின்றது. இந்த கோர விபத்தில் அந்தப் பெண்ணின் உயிர் நூலிலையில் தப்பியது.

இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவி காட்சியில் பதிவான நிலையில் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. மேலும் இந்த கோர விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.