பிரபல வங்கதேச அணி வீரர் தமிம் இக்பாலுக்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. டாக்கா பிரீமியர் டிவிஷன் தொடரில் விளையாடிக்கொண்டிருந்த போது நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டாக்கா பிரீமியர் டிவிஷன் கிரிக்கெட் லீக் தொடரில் இன்று காலை போட்டியானது நடந்தது. இதில், வங்கதேசத்தின் சவார் நகரில் உள்ள மொஹம்மதியன் கிளப்பிற்கும், ஷைன்புகூர் கிளப்பிற்கும் இடையில் இன்று காலை போட்டி நடந்து கொண்டிருந்தபோது திடீரென்று தமீம் இக்பாலிற்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.