அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் சசிகலா, ஓபிஎஸ்ஐ அதிமுகவில் இணைக்க சொல்லி பாஜக அழுத்தம் கொடுக்கிறதா? என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர் கூறியதாவது, நீங்களா ஒரு கற்பனையை பண்ணிக்கிறீங்க.

தினந்தோறும் அதிமுகவை பற்றி செய்தி உங்களுக்கு வந்து கொண்டே இருக்கணும். நீங்களே  கற்பனை செய்து கொள்கிறீர்கள், நீங்களா கேள்வி கேக்குறீங்க 100% அப்படி அல்ல. அதிமுகவை பொறுத்தவரை மிகச் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிற இயக்கம். இதில் யாரையும் சேர்த்துக் கொள்ள போவதாக இல்லை என்று தெரிவித்தார்.