இங்கிலாந்தில் உள்ள ஒரு கடற்கரையில் மர்மமான உருவம் ஒன்றைக் கண்டுபிடித்ததாக இரண்டு பயணிகள் தெரிவித்துள்ள சம்பவம், சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. “மனித எலும்புக்கூடு போலவும், மீன் வாலுக்கான அமைப்பும் கொண்ட அந்த உருவத்தை ஒரு கடற்கன்னி  என்கிறார்கள். இதனை பவுலா ரேகன் மற்றும் அவரது கணவர் டேவ் ரேகன் ஆகியோர் பார்த்துள்ளனர். இவர்கள் இருவரும் கடற்கரையில் நடைபயிற்சி மேற்கொண்டுக் கொண்டிருந்த போது மணலில்  அந்த உருவத்தை கண்டு அதிர்ச்சி அடைந்ததாக தெரிவித்துள்ளனர்.

அந்த உருவத்தை பார்ப்பதற்கு பாதி மனிதன் போன்றும் பாதி மீன் போன்றும் இருப்பதால் ஒரு கடல் கன்னி போன்று தோற்றம் அளிக்கிறது. அதே நேரத்தில் அது எலும்பு கூடாக தோற்றம் அளிக்கிறது. இருப்பினும் அழுகிய நிலையில் இல்லை. இது குறித்து அந்த தம்பதிகள் கூறும் போது நாங்கள் பார்த்ததாக சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள் என்பதால் புகைப்படம் எடுத்ததாக கூறியுள்ளனர்.

மேலும் இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில், இது ஏதேனும் கப்பலின் உடைந்த பாகமாக இருக்கலாம் என்று சிலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள். அதே நேரத்தில் சிலர் இது நம்ப முடியாத ஒன்றாக இருக்கிறது என்றும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். மேலும் இதனை தங்கள் கவனத்தில் கொண்டுள்ளதாக கூறிய மாவட்ட நிர்வாகம் இது பற்றி மேலும் விவரங்களை தெரிவிக்க மறுத்துவிட்டது.