
பாகிஸ்தானை சேர்ந்த 6 வயது சோனியா கான் என்ற சிறுமி புல் ஷாட் விளையாடும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் தீவிரமாக வைரலாகியுள்ளது. இங்கிலாந்தை சேர்ந்த புகழ்பெற்ற கிரிக்கெட் அம்பையர் ரிச்சர்ட் கேட்டில்பரோ இந்த வீடியோவை X பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ரோஹித் சர்மாவைப் போல் புல் ஷாட் விளாசும் சோனியாவின் திறமையை பாராட்டியுள்ளார். இது குறித்த வீடியோ தற்போது ஒரு மில்லியன் பார்வையாளர்களை தாண்டிய நிலையில் லைக்குகளையும் குவித்து வருகிறது.
இந்நிலையில் அந்த வீடியோவில் ஒரு ஆண் சிறுமி சோனியாவிற்கு பந்து வீச, அவள் அசாத்திய டைமிங்குடன் புல் ஷாட் விளையாடுவது காணப்படுகிறது. சோனியாவின் அழகான ஸ்ட்ரோக் பிளே மற்றும் நம்பிக்கையுடன் விளையாடும் திறமை, பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. பலரும் “ரோஹித் சர்மாவை மிஞ்சும் புல் ஷாட்”, “பாகிஸ்தான் ஆண்கள் அணிக்கே அனுப்புங்க, ஒரு மேட்ச் கிடைத்துவிடும்!” என கமெண்ட்களில் சுவாரஸ்யமாக பதிவு செய்து வருகிறார்கள்.
6 yrs old ~ Talented Sonia Khan from Pakistan 🇵🇰 (Plays Pull Shot like Rohit Sharma) 👏🏻 pic.twitter.com/Eu7WSOZh19
— Richard Kettleborough (@RichKettle07) March 19, 2025