புவியீர்ப்பு விசை இல்லாத சூழலில் பறப்பதன் கனவை நிறைவேற்றிய 8 வயது சிறுவன் ஜாக் மார்ட்டீன், தற்போது உலக அளவில் பெரும் சாதனை புரிந்துள்ளார். அமெரிக்காவை சேர்ந்த ஜாக், விண்வெளி வீரர்கள் பயிற்சி பெறும் பூஜ்ய புவியீர்ப்பு அறையில், அவர்களுடன் இணைந்து பறந்து, இந்த அரிய அனுபவத்தை பெற்றுள்ளார். பூமியின் ஈர்ப்பு விசையை தாண்டிய இந்த வகை பயிற்சியில் பங்கேற்ற இளம் வயது நபராக, ஜாக் மார்ட்டீன் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். விண்வெளி வீரர்கள் கூட கடுமையான பயிற்சிகளின் மூலம் இப்படிப் பறப்பதை கற்றுக்கொள்கிறார்கள் என்பதை நினைத்தால், இளம் வயதிலேயே இதை அனுபவித்தது குறிப்பிடத்தக்கது.
ஜாக் மார்ட்டீனின் இந்த பறக்கும் காட்சி தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போல் பரவி பலரது பாராட்டுகளை பெற்றுள்ளது. இச்சாதனையை அனுபவிக்க சிறுவனின் பெற்றோர் கட்டணம் செலுத்தி ஏற்பாடு செய்ததாகவும், இதனை சிலர் விமர்சனம் செய்தாலும், பலரும் ஒரு சிறுவன் இளம் வயதிலேயே தனது கனவை நிறைவேற்றி சாதனை புரிந்துள்ளதை வியப்புடன் பாராட்டி வருகிறார்கள். இது, அறிவியல் ஆர்வம் மற்றும் விண்வெளி பயணத்தின் மீது குழந்தைகளுக்கும் ஏற்படும் ஈர்ப்பை வெளிப்படுத்தும் ஒரு நல்ல எடுத்துக்காட்டு என்றும் கூறப்படுகிறது.
View this post on Instagram
