
ஐபிஎல் 2025 தொடரை முன்னிட்டு, பஞ்சாப் கிங்ஸ் அணி மற்றும் அதன் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட ரிக்கி பாண்டிங், அணியினருடன் சேர்ந்து பாரம்பரிய ஹிந்து பூஜையில் கலந்துகொண்டது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2024 செப்டம்பரில் பஞ்சாப் அணியின் தலைமை பயிற்சியாளராக 50 வயதான பாண்டிங் நியமிக்கப்பட்ட நிலையில் தற்போது இவர் , வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் ஆதரவுப் பணியாளர்களுடன் இணைந்து, அணிக்கு நல்ல தொடக்கம் மற்றும் வெற்றி வாய்ப்பு கிட்ட வேண்டி இந்த பூஜையில் கலந்துகொண்டார். இந்த நிகழ்வின் காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவ, பலரும் அவரின் பாரம்பரிய ஒற்றுமையைக் பாராட்டினர்.
ஆனால், இந்த வீடியோவை பார்த்த பாகிஸ்தான் ரசிகர்கள் சிலர் “மதத்தை விளையாட்டில் கலப்பது தவறு” எனக் கண்டனம் தெரிவித்தனர். இது போன்ற முறைகேடுகள் பற்றி பேசும் போது, 2023 உலகக் கோப்பையில் ஸ்ரீலங்காவுக்கு எதிரான போட்டியில் நமாஸ் செய்த மொஹம்மட் ரிஸ்வான் மீது இந்திய வழக்கறிஞர் வீணித் ஜிந்தால் ICC-க்கு புகார் அளித்ததை அவர்கள் நினைவுபடுத்தினர். ஜிந்தாலின் புகாரில், ரிஸ்வான் தனது மதத்தை மேடையில் வெளிப்படுத்தியதாகவும், அது விளையாட்டு ஆன்மாவிற்கு எதிரானதாகவும் கூறப்பட்டிருந்தது. இதனால், பாகிஸ்தானிய வீரர்கள் மீது இருமுகத் தன்மையுடன் மத அடிப்படையில் தாக்குதல் நடக்கிறது என அவர்கள் குற்றம்சாட்டினர்.
மேலும், 2024 T20 உலகக் கோப்பியில் பாகிஸ்தான் அணியின் மோசமான விளையாட்டுக்குப் பின்னர், ரிஸ்வான் “மத அடையாளத்தை” முன்வைத்து பேசுவதாக பாகிஸ்தான் முன்னாள் வீரர் அஹ்மத் ஷெஹ்சாத் விமர்சித்திருந்தார். அதேபோல், இமாம் உல் ஹக் 2025 Champions Trophy-இல், ரிஸ்வான் வீரர்களுக்காக நமாஸ் குழு வாட்ஸ் அப் குழு அமைத்ததும், ஹோட்டல் அறைகளில் ஒத்த மதத்தைச் சேர்ந்தவர்களுக்கே அனுமதி வழங்கியதையும் வெளிப்படுத்தினார். இந்தச் செயல் சுதந்திரமாக மதத்தை அனுசரிப்பதற்கே இடமளிக்காத உலகத்தின் இருநோக்கிய அணுகுமுறையைக் காட்டுகிறது என பாகிஸ்தான் ரசிகர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். மேலும் “நாங்கள் மதத்தை காட்டினால் அதைப் பற்றி கேள்வி கேட்கிறீர்கள்; மற்றவர்கள் செய்தால் ஏன் மௌனம்?” என சமூக வலைத்தளத்தில் கேள்வி எழுப்புகிறார்கள்.
Ricky Ponting doing Pooja. 🙏❤️pic.twitter.com/6BfAt62eOy
— Mufaddal Vohra (@mufaddal_vohra) March 20, 2025