
தமிழகத்தில் டாஸ்மாக் நிர்வாகத்தில் ஆயிரம் கோடி ரூபாய் வரை ஊழல் நடந்துள்ளதாக அமலாக்கத்துறை செய்தி வெளியிட்டது. இதற்கு கண்டனம் தெரிவித்து தமிழக பாஜக சார்பில் போராட்டம் நடைபெற்றது. அப்போது போலீசார் பாஜகவினரை கைது செய்த நிலையில் மாலை 6:00 மணி ஆகியும் அவர்களை விடுவிக்காததால் அண்ணாமலை கடும் வாக்குவாதம் செய்தார். அப்போது இனி தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் முதல்வர் ஸ்டாலின் புகைப்படத்தை ஆணி அடித்து பிரேம் போட்டு ஒட்டுவோம் என்று கூறினார்.
இதேபோன்று தற்போது தமிழகத்தில் உள்ள பல்வேறு டாஸ்மாக் கடைகளில் பாஜக மகளிர் அணி மற்றும் பாஜக நிர்வாகிகள் முதல்வர் ஸ்டாலினின் புகைப்படத்தை ஸ்டாலின் அப்பா என்ற வாசகத்துடன் ஒட்டி வருகிறார்கள். இது தொடர்பான வீடியோக்களை தமிழக பாஜக தங்களுடைய எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு வருகிறது.
இந்நிலையில் பாஜகவினர் டாஸ்மாக் கடைகளில் முதல்வர் ஸ்டாலினின் புகைப்படத்தை ஒட்டி வரும் நிலையில் தற்போது டாஸ்மாக்கில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அதாவது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படக்கூடாது என்பதற்காக பாஜகவினர் டாஸ்மாக்கில் ஸ்டாலினின் புகைப்படத்தை ஒட்டவரும் போது அவர்களை தடுத்து நிறுத்துவதோடு அதனையும் மீறி போட்டோவை ஒட்டும் நிர்வாகிகளை கைது செய்தும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். மேலும் இது தொடர்பான வீடியோக்களை தமிழக பாஜக தங்களுடைய எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு தமிழகத்தில் எத்தனையோ சட்டம் ஒழுங்கு சீர்கேடுகள் நடைபெறும் நிலையில் அதனை தடுக்காமல் டாஸ்மாக் கடைகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக விமர்சித்துள்ளனர்.
குழந்தைகள் முதல் மூதாட்டிகள் வரை தொடரும் பாலியல் குற்றங்களைத் தடுக்கத் தவறிய ஏவல்துறை, பட்டப்பகலில் நடுரோட்டில் நடக்கும் கொடூர கொலைகளைத் தடுக்க திராணியற்ற ஏவல்துறை,
குடிபோதையில் பொதுமக்களை மிரட்டி அச்சுறுத்தும் குண்டர்களை தடுக்க வக்கற்ற ஏவல்துறை,
ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் நமது… pic.twitter.com/dYUFVYP930— BJP Tamilnadu (@BJP4TamilNadu) March 20, 2025
பெரம்பலூர் மாவட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாவட்ட தலைவர் திரு செல்வராஜ் மற்றும் நிர்வாகிகள் டாஸ்மாக் மதுபானக் கடையில் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் போட்டோவை ஒட்ட முயன்ற போது கைது செய்யப்பட்டுள்ளனர்.@annamalai_k @BJP4TamilNadu @MSBalajiMSB @pugal_trichy pic.twitter.com/qHIyPxY8Y8
— bjpitpblr (@bjpitpblr) March 20, 2025