பீகார் மாநிலத்தில் தன்னுடைய காதலன் ஏமாற்றியதால் நேராக செல்போன் கடைக்கு சென்று அவரை காதலி கன்னத்தில் அறைந்த சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது. அதாவது அந்த இளம் பெண்ணை அந்த வாலிபர் கடந்த இரண்டு வருடங்களாக காதலித்து வந்துள்ளார். ஆனால் அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி மனைவி இருக்கிறார். இதனை மறைத்து அவர் இளம் பெண்ணுடன் காதல் உறவில் இருந்த நிலையில் அவருக்கு திருமணமான விஷயம் காதலிக்கு தெரிய வந்தது. இதனால் அந்த இளம் பெண் மிகவும் கோபம் அடைந்தார். பின்னர் தன் காதலன் செல்போன் வாங்குவதற்காக சென்றதை அறிந்த அந்த பெண் நேராக போன் கடைக்கே சென்றார். அவர் அங்கு நின்று கொண்டிருந்த தன் காதலனின் சட்டையைப் பிடித்து கன்னத்தில் பளார் விட்டார்.

பின்னர் நீ என்னுடைய காதலன் என்றால் நீ யாருக்காக மொபைல் வாங்குகிறாய் என்று கோபத்தோடு கேட்ட நிலையில் தொடர்ந்து அவரின் காலரை பிடித்து அடிக்க தொடங்கினார். இந்த தகராறை அங்கிருந்தவர்கள் செல்போனில் வீடியோ பதிவு செய்தனர். இந்நிலையில் தன்னை ஏமாற்றியதற்காக அந்த வாலிபரை போலீஸ் ஸ்டேஷனுக்கு அந்த இளம் பெண் அழைத்த  நிலையில் கடைசியில் நான் என்னுடைய மனைவிக்காக தான் செல்போன் வாங்க வந்தேன் என்பதை ஒப்புக்கொண்டார். இது மேலும் அந்த இளம் பெண்ணுக்கு கோபத்தை ஏற்படுத்திய நிலையில் தொடர்ந்து அவரை தாக்கினார். பின்னர் கடையின் உரிமையாளர் அவர்களை சமாதானம் செய்து காவல் நிலையத்திற்கு செல்லுமாறு அறிவுறுத்தினார். மேலும் பாதிக்கப்பட்ட இளம்பெண் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ள நிலையில் அந்த வாலிபர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.