
கள்ளக்குறிச்சி மாவட்டம் பகண்டை கூட்டு சாலை ரத்தினாம்பாள் நகர் பகுதியில் சேர்ந்தவர் கருணாமூர்த்தி. இவரது மனைவி பாக்கியலட்சுமி ஓடியந்தல் கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் காங்கியனூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர் இரவு நேரத்தில் மதுபோதையில் பாக்கியலட்சுமியின் வீட்டிற்குள் அத்திமீறி நுழைந்தார்.
மேலும் மது அருந்துவதற்கு தம்ளர் கேட்டு தகராறு செய்துள்ளார். அவரை பாக்கியலட்சுமி கண்டித்துள்ளார். இதனால் கோபமடைந்த ராஜேஷ் பாக்கியலட்சுமியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார். இதுகுறித்து பாக்கியலட்சுமி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் ராஜேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.