இந்திய பணக்காரர்களில் முதலிடத்தில் இருப்பவர் முகேஷ் அம்பானி. அவருடைய இளைய மகன் ஆனந்த் அம்பானி. இவருக்கு கடந்த வருடம் ராதிகா என்பவரோடு கோலாகலமாக திருமணம் நடந்தது. திருமணத்தை விழா போல நடத்தினார் முகேஷ் அம்பானி. இந்திய பிரபலங்களை தாண்டி பாலிவுட் பாடகர்கள் பலர் இவர்களுடைய திருமணத்தில் கலந்து கொண்டார்கள். இந்த திருமணத்தில் உலகத்தில் மிகவும் பேமஸ் ஃபேஷன் இன்ஃப்ளூயன்சரும், நடிகையுமான கிம் கர்தாஷியனும், அவருடைய அக்கா குளோயி கர்தாஷியனும் கலந்து கொண்டிருந்தார்கள்.

இந்நிலையில் இவர்கள் அம்பானி வீட்டு திருமணம் குறித்து பேசி உள்ளார்கள். அதில் அம்பானி யாரென்று தெரியாது. ஆனால் எங்களுக்கு தெரிந்த ஒரு டிசைனர் மூலமாக தெரிய வந்தது. அவர் மகன் கல்யாணத்தில் கலந்து கொண்ட போது நான் போட்டிருந்த வைர நெக்லஸிலிருந்து ஒரு வைரம் கீழே விழுந்து தொலைந்து போனது. அந்த வைரம் எங்கே போனது என்று தெரியவில்லை. தேடியும் கிடைக்கவில்லை. பல லட்சம் மதிப்புள்ள வைரம்  தொலைந்து போனது கஷ்டமாக இருப்பதாக கிம் கூறியுள்ளார்.