சண்டிகர் மாநிலத்தைச் சேர்ந்த ரத்தன் தில்லான் என்பவர் தனது வீட்டை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது அவரது குடும்பத்தினர் வாங்கி வைத்திருந்த ரிலையன்ஸ் நிறுவனத்தின் பழைய பங்கு பத்திரம் கிடைத்தது. கடந்த 1988-ஆம் ஆண்டு வெறும் ஒரு ஷேர் 10 ரூபாய் என்ற வீதம் 300 ரூபாய்க்கு 30 ஷேர்களை அவரது குடும்பத்தினர் வாங்கியுள்ளனர்.

தற்போது அந்த 30 ஷேர்களின் மதிப்பு 11.88 லட்ச ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது. வீட்டை சுத்தம் செய்த ரத்தம் தில்லானுக்கு இப்படி ஒரு அதிர்ஷ்டம் கிடைத்துள்ளது. 30 ஆண்டுகளுக்கு முன்பு ரத்தன் தில்லானின் குடும்பத்தினர் 300 ரூபாய்க்கு வாங்கி வைத்திருந்த பங்குகளின் தற்போதைய மதிப்பு 11.88 லட்சமாக அதிகரித்துள்ளது.