தமிழக அரசு தற்போது பால் உற்பத்தியாளர்களுக்கான விபத்து காப்பீடு தொகையை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. அதன்படி பால் உற்பத்தியாளர்களுக்கான விபத்து மரண இழப்பீடு 2.50 லட்சத்திலிருந்து 4 லட்ச ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அதன்பிறகு இரண்டு குழந்தைகளுக்கு கல்வித்தொகை 25 ஆயிரம் ரூபாயிலிருந்து 50 ஆயிரம் ரூபாய் ஆக  உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும்ஒரு பெண் குழந்தைக்கான திருமண உதவி தொகை 30 ஆயிரம் ரூபாயிலிருந்து 60 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் இதற்கான அரசாணை தற்போது வெளியாகியுள்ளது.