தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் நடத்திய இப்தார் நோன்பு நிகழ்ச்சியில் ஏராளமான பங்கேற்றனர். இதுகுறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது, எனக்கு நிறைய உறவுக்காரர்கள் இஸ்லாம் மதத்தில் இருக்கின்றனர். நான் ஒரு நாள் தொப்பி போட்டு வேடம் போடுபவன் கிடையாது. நான் மக்களின் உணர்வுக்கானவன்.
அவர்களின் உரிமைக்கானவன். இதுபோன்று செய்வது விஜய்க்கு பிடித்திருக்கிறது. அதனால் செய்கிறார். அவர் சென்று வந்ததால் எந்த பாதிப்பும் இல்லை. நாட்டிற்கும் மக்களுக்கும் இதனால் என்ன பிரச்சனை? ஒன்றும் இல்லை. அதனால் அதைப் பற்றி பேச தேவையில்லை என கூறினார்.
