
தமிழகத்தில் மார்ச் மாதம் மட்டும் அனைத்து சனிக்கிழமைகளும் பத்திரப்பதிவு அலுவலகங்கள் வழக்கம் போல் செயல்படும் என்று அரசு அறிவித்துள்ளது. அதன் பிறகு சுப முகூர்த்த நாள் போன்ற விசேஷ தினங்களில் ஏராளமான மக்கள் பத்திரப்பதிவு செய்ய விரும்புவார்கள். அதோடு சுப முகூர்த்த நாளில் ஏராளமான திருமண பதிவுகளும் நடக்கும். இதனால் அன்றைய தினம் மட்டும் கூடுதல் டோக்கன் விநியோகிக்கப்படுவது வழக்கம்.
அந்த வகையில் இன்று மாசி மாத சுபமுகூர்த்த நாள் என்பதால் மக்கள் பத்திரப்பதிவு செய்ய விரும்புவார்கள். இதன் காரணமாக இன்று கூடுதல் டோக்கன் விநியோகிக்கப்படும். அதன்படி வழக்கமாக 100 டோக்கன்கள் விநியோகிக்கப்படும் அலுவலகங்களில் கூடுதலாக 150 டோக்கன்கள் விநியோகிக்கப்படும். மேலும் 200 டோக்கன்கள் விநியோகிக்கப்படும் அலுவலகங்களில் இன்று கூடுதலாக 300 டோக்கன்கள் வரை விநியோகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.