இத்தாலி நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற பிரபல நடிகை எலியனாரோ ஜார்ஜி. இவருக்கு தற்போது 71 வயது ஆகும் நிலையில் கணைய புற்றுநோய் காரணமாக உயிரிழந்தார். இவர் கடந்த 1980 ஆம் ஆண்டு வெளியான Inforno படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இதைத்தொடர்ந்து 50-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் மற்றும் டிவி நிகழ்ச்சிகளில் நடித்துள்ளார்.
இவர் இரண்டு படங்களை இயக்கியுள்ளார். இவர் தனக்கு கேன்சர் இருப்பது தெரிய வந்தபோது வாழ்க்கையை வீணடிக்காமல் வாழுங்கள் என்று ரசிகர்களிடம் கூறினார். மேலும் இவருடைய மறைவுக்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள் .
