இன்றைய காலகட்டத்தில் புதிதாக திருமணமானவர்கள் தேனிலவுக்கு செல்வது சாதாரணமாகிவிட்டது. புதிதாக திருமணமானவர்கள் தங்களை ஒருவருக்கொருவர் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக தேனிலவுக்கு செல்கிறார்கள். அந்த வகையில் இன்ஸ்டாவில் பிரபலமாக இருக்கும் ஜூலி மற்றும் கோரியின் ஆகியோருக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்கள் இருவரும் தேனிலவுக்காக ஹெலிகாப்டரில் ஒரு தீவுக்கு செல்கிறார்கள்.

அங்கு அவர்கள் ஒரு ஹோட்டலுக்கு சென்றனர். அந்த ஹோட்டலுக்கு சென்றதும் அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது. அதாவது அந்த ஹோட்டல் அறையின் முன் பகுதி திறந்த வெளியில் இருக்கும் நிலையில் சுவர் மற்றும் கண்ணாடி  எதுவும் இல்லை. அங்கு ஒரு படுக்கையும் நீச்சல் குளமும் இருக்கிறது. இதைப் பார்த்தவுடன் அவர்கள் சற்று பின்னோக்கி நகர்ந்தனர். மேலும் இதனை அவர்கள் வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட அது மிகவும் வைரலாகி வருகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by Julie B & Corey (@julieandcorey)