
கேரளாவின் பத்தினம்திட்டா பகுதியில் உள்ள பள்ளியில் பிரிவு உபசார நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் ஸ்டன்ட் செய்வதற்காக பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் பிஎம்டபிள்யூ காரை 2000 ரூபாய் கொடுத்து வாடகைக்கு எடுத்து வந்தனர்.
இந்த நிலையில் பள்ளி மைதானத்தில் புழுதி பறக்க சாகசத்தில் ஈடுபட்டிருந்த காரை பார்த்த ஒரு ஆசிரியர் உடனே பள்ளியின் வாயிற்கதவை மூடிவிட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அந்த தகவலின் படி சம்பவம் இடத்திற்கு வந்த போலீசார் பிஎம்டபிள்யூ காரை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.