
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் சாலையில் நடந்த ஒரு பயங்கர விபத்து மிகவும் அதிர்ச்சிகரமானதாக இருக்கிறது. அதாவது சாலையில் சென்று கொண்டிருந்த போது திடீரென ஒரு டிரக்கின் டயர் பயங்கரமாக வெடித்தது. இந்த விபத்தில் அருகில் இருந்த ஒரு ஆட்டோ ரிக்ஷா சேதமடைந்தது. அதோடு ஆட்டோ ஓட்டுனரின் காதுகளும் பாதிக்கப்பட்டு அவருடைய கேட்கும் திறன் பறிபோனது.
டயர் வெடித்ததும் ஆட்டோ ஓட்டுனர் தன்னுடைய இரு காதுகளையும் கைகளால் பொத்திக்கொண்டு அலறுகிறார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து அவரை பார்க்கிறார்கள். ஆனால் அவருக்கு காது கேட்கவில்லை. அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ट्रक का टायर फटने से ऑटो रिक्शा के उड़े चीथड़े, ऑटो चालक के कान का पर्दा भी फट गया। अब उसे कुछ सुनाई नहीं दे रहा। pic.twitter.com/dLCGkjSu6K
— Abhimanyu Singh Journalist (@Abhimanyu1305) February 23, 2025