தபால் நிலைய தொடர் வைப்பு நிதி திட்டம் என்பது இந்திய அரசால் நடத்தப்படும் ஒரு பிரபலமான சேமிப்பு திட்டம் ஆகும். குறைந்த அளவு முதலீட்டில் அதிக அளவு லாபத்தை ஈட்ட வேண்டும் என்று விரும்புபவர்கள் இந்த திட்டத்தில் இணைந்து பயன்பெறலாம். போஸ்ட் ஆபீஸ் RD திட்டம் நடுத்தர வர்க்கம் மற்றும் குறைந்த வருமானம் கொண்டவர்களுக்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் முக்கிய அம்சம் அரசால் அங்கீகரிக்கப்பட்ட திட்டமாக இருப்பதால் உங்கள் பணம் இங்கு முற்றிலும் பாதுகாப்பாக தான் இருக்கும்.
அதே சமயம் அரசால் தீர்மானிக்கப்படும் காலாண்டு வட்டி விகிதங்களின் அடிப்படையில் வட்டி விகிதம் வழங்கப்படுகின்றது. 2025 ஆம் ஆண்டில் இந்தத் திட்டத்தின் வட்டி விகிதம் ஏழு சதவீதம் வரை இருக்கும். இந்த வட்டி விகிதம் கூட்டு அடிப்படையில் பயன்படுத்தப்படுகின்றது. அதாவது உங்களுடைய வைப்புத் தொகையின் வட்டி ஒவ்வொரு காலாண்டிலும் அதிகரிக்கும். தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் முதலீடு செய்தால் இந்த திட்டத்தில் நல்ல லாபம் பெற முடியும்.
அதாவது நீங்கள் ஒவ்வொரு மாதமும் ஆயிரம் ரூபாய் டெபாசிட் செய்து 6.8 சதவீதம் வட்டி விகிதத்தை எடுத்துக் கொண்டால் ஐந்து ஆண்டுகளுக்கு பின்னர் 72000 ரிட்டன் பெறுவீர்கள். போஸ்ட் ஆபீஸ் இன் இந்த திட்டத்தில் முதலீடு செய்வது மிகவும் எளிதானது தான். அருகில் உள்ள தபால் நிலையத்திற்குச் சென்ற நீங்கள் 100 ரூபாய் முதலீட்டில் கணக்கு தொடங்கிக் கொள்ளலாம். கணக்கு தொடங்க ஆதார் அட்டை மற்றும் பான் கார்டு உள்ளிட்ட ஆவணங்கள் தேவைப்படும். இந்தத் திட்டத்தில் மாதத்திற்கு குறைந்தபட்சம் 100 ரூபாய் முதலீடு செய்யலாம். அதிகபட்ச முதலீட்டு வரம்பு எதுவும் கிடையாது.
